தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூசாரிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கிராம மக்கள்! - Dindugal news

வத்தலக்குண்டு அருகே பூசாரிக்கு கோயில் கட்டி கிராம மக்கள் கும்பாபிஷேகம் நடத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

priest
பூசாரிக்கு கோயில்

By

Published : Jul 15, 2021, 8:12 AM IST

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரத்தில் கலியுக சிதம்பரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நந்தி சிலை உள்ளது .

இக்கோயிலின் பூசாரியாக சிதம்பரம் என்பவர் இருந்தார். அவரை அடையாளப்படுத்தும் வகையில், அவர் வசித்த கிராமம் பூசாரிபட்டி என்று அழைக்கப்பட்டது.

அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மகன் நடராஜன் கோயில் பூசாரி ஆனார். அவர் வாழ்நாள் முழுவதும் கோயிலுக்காகவே தன்னை அர்ப்பணித்தார்.மேலும் பூசாரிபட்டி கிராம மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் அவர் செய்தார்.

கடந்தாண்டு ஜூலை 14ஆம்தேதி நடராஜன் மரணித்தார். அவரின் மரணம் ஓட்டுமொத்த ஊரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பூசாரிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கிராம மக்கள்

பூசாரி நடராஜன் நினைவாக அவருக்கு கோயில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, பூசாரியின் சமாதி அருகே நடராஜன்சுவாமி திருவரசு என்ற பெயரில் கோயிலை கட்டினர்.

இந்தநிலையில் பூசாரி நடராஜனின் நினைவு நாளான நேற்று (ஜூலை 14) அவருக்காக கட்டப்பட்ட கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும், ஊர் மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளைக் கலியுக சிதம்பரேசுவரர் கோயில் பூசாரியும், கூட்டுறவு வீடு கட்டும் சங்கத் தலைவருமான சுந்தர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

இதையும் படிங்க:நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் - காவரி விவகாரத்தில் கமல் கருத்து

ABOUT THE AUTHOR

...view details