தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் !

திண்டுக்கல்: 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

refuse-vote-in-local-body-elections
refuse-vote-in-local-body-elections

By

Published : Dec 19, 2019, 4:27 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட அனுமந்தராயன் கோட்டை, கன்னிவாடி, சின்னாளப்பட்டி, வீரக்கல், பித்தளைப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்தில் இருந்து வரும் தண்ணீர் வராததால் விவசாயம் முற்றிலுமாக அழிந்துள்ளது. அதேபோல் தற்போது குடிநீர் மட்டுமன்றி அன்றாடம் பயன்படுத்த கூடிய நீரைக்கூட விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராமமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அரசு அலுவலர்களிடமும், மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கருப்புக்கொடியுடன் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்

எனவே அனுமந்தராயன் கோட்டை முக்கிய சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கையில் கருப்பு கொடியுடன் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலை கிராமமக்கள் அனைவரும் முற்றிலும் புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல் - 183 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details