தமிழ்நாடு

tamil nadu

ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியே இருப்பதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

By

Published : Oct 6, 2021, 5:40 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பூம்பாறை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியே இருப்பதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியே இருப்பதாக குற்றச்சாட்டு
ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியே இருப்பதாக குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது.

இப்பகுதியில் மருத்துவமனை இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக, கிராம மக்கள் 15 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள கொடைக்கானல் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று வந்தனர்.

கிராம மக்கள் குற்றச்சாட்டு

இந்நிலையில் பூம்பாறை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியே இருப்பதாக குற்றச்சாட்டு

சில மாதங்கள் மட்டுமே முறையாக, இயங்கிய இந்த ஆரம்ப சுகாதார நிலையம், தற்பொழுது பூட்டியே உள்ளதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:வாக்களிக்க அனுமதி மறுப்பு - பெண் வாக்காளரின் மாமனார் வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details