தமிழ்நாட்டில் ஊராட்சிப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று இறுதி பட்டியல் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி ஊராட்சி 7, 8, 9 வார்டுகளில் 9ஆவது வார்டை பூண்டி கிராமத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கடந்த வாரம் கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து கோட்டாட்சியருக்கும், கிராம மக்களுக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.