தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் நன்மைக்காக முதலமைச்சர் வெளிநாடு பயணம்: விஜயபிரபாகரன் பாராட்டு - Vijayaprabhakaran offers pray in Palani Murugan Temple

திண்டுக்கல்: தமிழ்நாட்டின் நன்மைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Vijayaprabhakaran

By

Published : Sep 7, 2019, 12:09 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சாமி தரிசனம் செய்தார். மேலும் நெடுஞ்சான்கிடையாக விழுந்தும் முருகனை வழிபட்டார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தந்தை விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி அவர் பூரணநலம் பெற வேண்டும் என்றும் பழனி முருகனை வேண்டி தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக பங்கேற்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது என பதிலளித்துள்ளார்.

விஜயபிரபாகரன்

முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜயபிரபாகரன், தமிழ்நாட்டின் நன்மைக்காக முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதை வரவேற்பதாகக் கூறினார்.

மேலும் இந்தியப் பொருளாதாரம் மந்தநிலை குறித்து வதந்தி பரப்பப்படுவதாக குற்றம்சாட்டிய விஜயபிரபாகரன், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, அதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அப்போது அவருடன் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. பாலு, நகர செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details