திண்டுக்கல்:தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த் ஆட்சிக்கு வருவாரா வரமாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அரசியலுக்கு வரப்போவது இல்லை என ரஜினி தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் ரசிகர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர்.
அரசியலுக்கு வருவாரா வர மாட்டாரா என ரஜினி ரசிகர்கள் போல் விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், ஜுன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாள் வருவதால் அவரது ரசிகர்கள் பல இடங்களில் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அடிக்கப்பட்ட போஸ்டர், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.