திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மே.11 காலை திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காய்கறி வியாபாரிகள் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்று கோஷமிட்டனர்.
சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம்!
திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து காய்கறிகளை சாலையில் கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காய்கறிகளை சாலையில் கொட்டிப் போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த நிலக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் வாணி தலைமையிலான காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கடையை வேறு இடத்திற்கு மாற்றினால், அங்கு ஒரு கடைக்கு 100 ரூபாய் என்று வாடகை வசூல் செய்வார்கள், வியாபாரம் இல்லாத நேரத்தில் இரட்டிப்பு வாடகை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஆகையால், முறையான நடவடிக்கை மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதே போல் ஈரோடு மாவட்டத்திலும் இதே கோரிக்கையுடன் போராட்டம் நடத்தப்பட்டது.