தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் ஏழு சாதி உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாவட்டங்களில் வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவேந்திரகுல வேளாளர் என்ற அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - தேவேந்திர குல வேளாளர் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு

தேவேந்திரகுல வேளாளர் என்ற அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் அகில இந்திய வஉசி பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்தலகுண்டு, சேவுகம்பட்டி, மேலக்கோவில்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, வாடிப்பட்டி, பழைய வத்தலகுண்டு, செக்காபட்டி, வீருவீடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500 பேர் இதில் கலந்துகொண்டனர்.
இதனிடையே திடீரென நான்கு முனை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 120 பேரை வத்தலகுண்டு காவல் துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.