தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர்கள் விமல், சூரி பயன்படுத்திய வாகனம் பறிமுதல்! - corona News

திண்டுக்கல்: நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் பயன்படுத்திய இரண்டு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

vehicles-of-actors-vimal-and-soori-seized-by-police
vehicles-of-actors-vimal-and-soori-seized-by-police

By

Published : Jul 30, 2020, 4:43 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்கு முறையான அனுமதியின்றி நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்டோர் சென்று அங்குள்ள ஏரியில் மீன் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நடிகர்கள் சென்றிருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு உதவி புரிந்ததாக வனத்துறையைச் சேர்ந்த மூன்று தற்காலிக வனப்பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியது, கரோனா பெருந்தொற்று பரவக் காரணமாக இருந்தது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர்களை கொடைக்கானலுக்கு அழைத்து வர உதவியாக இருந்த உள்ளூர் வாகனம் மற்றும் அவர்களுக்கு உணவு வழங்க பயன்படுத்திய இரு வாகனங்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:கடன் வாங்கியதாக அவதூறு: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு புகார்

ABOUT THE AUTHOR

...view details