இந்தியாவில் கரோனா பெருந்தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் அடிப்படை அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உணவு, காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனை பயன்படுத்தி சிலர் அதிகப்படியான விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சியின் சார்பாக நகரில் உள்ள ஐந்து இடங்களில் காய்கறிகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டன.