ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை என்பது தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால், சந்தைக்குக் காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. அதனால் கடந்த ஒரு மாத காலமாகக் காய்கறிகளின் விலை அதிகரித்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக மொத்த விலையில் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆன சின்ன வெங்காயம் தற்போது விலை உயர்ந்து, நேற்று ஒரு கிலோ 45 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு..! - ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு அதனால் என்று சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
vegetable price high in dindugul market
இது குறித்து இங்குள்ள வியாபாரிகள் கூறுகையில், விலை உயர்வு இருந்தும், விவசாயிகள் காய்கறி உற்பத்தியில் இல்லாதது, வியாபாரிகளுக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அதேசமயம் காய்கறிகளை வாங்கும்போது மக்களுக்கு, இந்த விலை உயர்வு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இனிவரும் காலங்களில் மழை பெய்து, விவசாயத்தைப் பெருக்கினால் மட்டுமே, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறி விலை குறையும் என கூறியுள்ளனர்.