திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது ஆணைப்படி. இந்த கிராமத்தில் ராமசாமி மற்றும் அவரின் சகோதரர் சக்கணன் இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். ராமசாமிக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் தனது சகோதரன் மகனான சிட்டகை கவுண்டர் என்பவரை சிறுவயதிலிருந்தே தனது மகனாக நினைத்து வளர்த்து வந்தார்.
விவசாயி வெட்டி கொலை-ரயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு - murder
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சொத்து தகராறு காரணமாக விவசாயி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராமசாமிக்கும் சக்கணனுக்கும் சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய ராமசாமியின் வளர்ப்பு மகன் சிட்டகை கவுண்டர் முயற்சித்தார். அதை மறுத்த ராமசாமியை சிட்டகை கவுண்டரும், சக்கண்னனும் சேர்ந்து நேற்று முன் தினம் அவரை அரிவாளால் வெட்டி உடலை ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளனர்.
பொதுமக்கள் தண்டவாளத்தில் அவர் உடலைக் கண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு சென்ற காவல் துறையினர் ராமசாமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து விசாரிக்கையில் ராமசாமியின் வளர்ப்பு மகனான சிட்டகை கவுண்டர் அவரின் சகோதரர் சக்கண்னன் ஆகிய இருவரும்தான் ராமசாமியை சொத்துக்காக கொலை செய்தார்கள் என்பது தெரியவந்தது.