திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாலிசெட்டியபட்டியைச் சேர்ந்தவர் சடையப்பன்(43). இவர் அருணாச்சலபிரதேச மாநிலத்தில் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். 2 தினங்களுக்கு முன்பு சடையப்பன் சீன எல்லையான ஓரக் என்ற இடத்தில் பீரங்கி இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பொதுமக்கள் அஞ்சலி
அப்போது அங்கிருந்த குளிர் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சக ராணுவ வீரர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அங்குள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சடையப்பன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று அதிகாலை அவரது சொந்தக் கிராமம் வாலிசெட்டிபட்டிக்கு உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் சடையப்பனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.