திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மகாமுனி என்பவருடைய மகன் சிவா. இரவு தோப்புப்பட்டி கிராமத்திற்கு கரகாட்டம் பார்க்க சிவா தனது காரில் சென்றுள்ளார். திடீரென அவர் சென்ற கார் மர்மமான முறையில் வேலாயுதம் பாளையம் கணவாய் பகுதியில் எரிந்த நிலையில் கிடந்துள்ளது .
'எரிந்த நிலையில் சடலம் மீட்பு'- கொலையா? விபத்தா? - வேடசந்தூர்
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே வேலாயுதம்பாளையம் கணவாய் பகுதியில் எரிந்த காரில் சிவா என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.
தகவலறிந்த காவல் துறையினர் காரில் இருந்து கருகிய நிலையிலிருந்த சிவாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வடமதுரை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கார் எரிக்கப்பட்ட இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பார்வையிட்டு இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். மலைப்பகுதியில் காருடன் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.