திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாயக்கனூர் பகுதியில் பட்டியலினத்தவர்கள் மற்றும் மாற்று மதத்தினருக்கு வீடு வாடகைக்கு தருவதில்லை என்று பெண் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் வீடு வாடகைக்கு கேட்டு செல்கிறார்.
எஸ்சி-க்கு வீடு கிடையாது... குல தெய்வத்துக்கு ஒத்துக்காது... மறுக்கும் உரிமையாளாரின் வீடியோ... - பெண் ஒருவர் பேசிய வீடியோ
திண்டுக்கல்லில் எஸ்சி-க்கு வீடு கொடுப்பதில்லை, அப்படி கொடுத்தால் எங்களது குல தெய்வத்திற்கு ஒத்துக்காது என்று கூறும் உரிமையாளரின் வீடியோ வைரலாகிவருகிறது.
அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் பட்டியல் இனத்தவர் மற்றும் பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடு கொடுக்க முடியாது. அப்படி கொடுத்தால் எங்கள் குல தெய்வத்திற்கு ஒத்துக்காது. அவர்களால் வீட்டில் வளரும் குழந்தைகள் கெட்டுப் போவார்கள் என்று கூறி மறுக்கிறார். இந்த வீடியோ குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தென்காசி தீண்டாமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை