திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது. அப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (அக். 09) நள்ளிரவு பள்ளி வகுப்பறைக்குள் சிலர் தீவைத்துள்ளனர். பின்னர் தீவைக்கப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். அவர்களால் தீயை அணைக்க முடியாததால், தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.