தமிழ்நாடு

tamil nadu

போதை பொருள் வழக்கில் சிக்கிய கெளசல்யாவின் தாய், பாட்டி...!

By

Published : Nov 30, 2019, 11:31 PM IST

Updated : Nov 30, 2019, 11:53 PM IST

திண்டுக்கல்: போதைபொருள் விற்பனை செய்ததாக, உடுமலைப்பேட்டை கௌசல்யாவின் தாய் மற்றும் பாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

cannabis-case
cannabis-case

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டைய உலுக்கிய சம்பவம் உடுமலை கௌசல்யாவின் கணவர் சங்கரின் ஆணவக் கொலை விவகாரம். இந்த கொலை சம்பவத்தில் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட ஆறு பேருக்கு தூக்குதண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கெளசல்யா வேறொரு இளைஞரை மணம் முடித்துக்கொண்டு தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் பாட்டி கோதையம்மாள் தற்போது போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழனி அருகில் உள்ள குப்பம்பாளையம் பகுதியில் தாலுகா காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ராமன் என்பவரது மனைவி கோதையம்மாள் (70) வீட்டில் போதை பொருளை விற்பனைக்காக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதயைடுத்து கோதையம்மாளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது மகள் அன்னலட்சுமி(42) போதை பொருளை கொடுத்தது தெரியவந்தது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் இருவரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கைப்பைக்குள் கஞ்சா.. காவல் துறை விசாரணை...

Last Updated : Nov 30, 2019, 11:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details