தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டு யானையை கண்டு பயந்து ஓடியதில் இரு பெண்கள் படுகாயம்

பழனி அருகே காட்டிற்குள் சென்றபோது காட்டு யானையை கண்டு பயந்து ஓடி காயமடைந்த இரு பெண்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காட்டு யானையை கண்டு பயந்து ஓடி இரு பெண்கள் படுகாயம்
காட்டு யானையை கண்டு பயந்து ஓடி இரு பெண்கள் படுகாயம்

By

Published : Aug 23, 2022, 11:43 AM IST

திண்டுக்கல்: பழனியை அடுத்துள்ளது ஆயக்குடி பேரூராட்சி. இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பொன்னி மலை கரடு அருகே உள்ள வனப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. ஆயக்குடியை சேர்ந்த வள்ளிநாயகம், முனியம்மாள் ஆகியோர் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வனப்பகுதியில் காட்டுயானை வருவதை கண்ட இரு பெண்களும் அலறியடித்து பயந்து ஓடி வனப் பகுதியை விட்டு வெளியேறினர். அப்போது வேகமாக ஓடிய போது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீட்க்கப்பட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காட்டு யானையை கண்டு பயந்து ஓடி இரு பெண்கள் படுகாயம்

பயத்தில் ஓடி முகம் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்ட பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதிக்குள் யாரும் செல்லவேண்டாம் என வனத்துறையினர் பலமுறை அறிவுறுத்தியும் கிராம மக்கள் சென்று வருவதே இது போன்ற சம்பவங்கள் தொடர் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ...மகள் கண்முன் உயிரிழந்த தந்தை

ABOUT THE AUTHOR

...view details