திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை சமீபகாலமாக அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்தது. இதனிடையே திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் ராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உதவி ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த போஸ் (59), சுக்காம்பட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (32) ஆகியோர் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை: இருவர் கைது - அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள்
திண்டுக்கல்: அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யபட்ட போஸ்
தொடர்ந்து இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களுக்கு எப்படி இந்த லாட்டரி சீட்டுகள் கிடைத்தது, யார் மூலம் இவற்றைப் பெறுகிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, நாடு முழுவதும் ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு தடைவிதிக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.