தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே விபத்து - வக்கீல் உள்ளிட்ட இருவர் பலி - dindugal

கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதிய விபத்தில் வக்கீல் உள்ளிட்ட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே விபத்து - வக்கீல் உள்ளிட்ட இருவர் பலி
திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே விபத்து - வக்கீல் உள்ளிட்ட இருவர் பலி

By

Published : Sep 12, 2022, 8:57 PM IST

திண்டுக்கல்:சாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் மைக்கேல் பாரதி மற்றும் அவரது ஜூனியர் வழக்கறிஞர் மோனிகா ஆகிய இருவரும் காரில் ஓட்டுநருடன் சேலம் கோர்ட்டில் ஒரு வழக்கிற்காக சென்று விட்டு, சாத்தூரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி, கார் சாலையில் சென்டர் மீடியனில் மோதி, எதிர்ப்புற சாலையில் உருண்டோடியது.

இதில் ஜூனியர் வழக்கறிஞரான மோனிகா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கார் ஓட்டுநர் அசோக் குமார் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இவர்களில் வழக்கறிஞர் மைக்கேல் பாரதி மட்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மைநாயக்கனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:துபாயில் இருந்து சென்னை வந்த இரண்டு விமானங்களில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details