திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதியான பள்ளபட்டி காவல் சோதனைச் சாவடியருகே பழனி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற, விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த இரு சகோதரர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்நிலையில் அதிகாலைப்பொழுது என்பதால் சம்பவ இடத்தில் யாரும் இல்லாததால், இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலெட்சுமி உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், திருச்சுழியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கனிமுருகன் மற்றும் அவரது சகோதரர் முத்துராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
அதன் பின் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் இரவு நேரங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி நடந்ததால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது.