தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் ஏரியில் படகில் வானவேடிக்கை நிகழ்த்திய இருவர் பணி நீக்கம் - kodaikanal news in tamil

கொடைக்கானல் ஏரியில் விதிமுறைகளை மீறி படகில் வானவேடிக்கை நடத்திய விவகாரத்தில் படகு குழாமை சேர்ந்த இரண்டு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Two fired for firing on boat in Kodaikanal Lake
கொடைக்கானல் ஏரியில் படகில் வானவேடிக்கை நிகழ்திய இருவர் பணி நீக்கம்

By

Published : Feb 22, 2021, 9:37 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான படகு குழாம் அமைந்துள்ளது. இந்த குழாமில் இருந்து படகு அலங்கரிக்கப்பட்டு அதில் விதிகளை மீறி வானவேடிக்கை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி நடத்தப்பட்டதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

படகுகள் இயக்குவதற்கு பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அந்த விதிகளை எல்லாம் மீறி அலங்கரிக்கப்பட்ட படகில் வானவேடிக்கை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, படகில் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கையும் எழுந்தது.

இதையடுத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாமில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களான முருகேசன், லட்சுமணன் ஆகிய இருவரை படகு குழாம் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், படகு குழாம் மேலாளர் பூபாலன் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், படகில் சென்ற கோவையைச் சேர்ந்த டேனியல் ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கொடைக்கானலில் கருப்பு நிற கேரட் விவசாயம்!

ABOUT THE AUTHOR

...view details