திண்டுக்கல்: நத்தம் அருகே போலி மருத்துவர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதனால் நத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தங்கதுரை, காவல் ஆய்வாளர் ராஜமுரளி தலைமையிலான அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
நத்தம் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்
நத்தம் அருகே பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்த இரு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலி மருத்துவர்கள்
அப்போது செந்துறையில் சிவலிங்கம் (50), மணக்காட்டூரில் வனிதா (42) ஆகியோர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலி மருத்துவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க : தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது