திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட திருமலைக்கேணி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். நேற்று (செப்.15) மாலை ஒரு ஆணுடன் இளம்பெண் கோயிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் கோயிலின் கிரிவலப்பாதையில், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பெண்ணின் கைப்பையிலிருந்து ஆதார் அட்டை, குடும்ப அட்டையை எடுத்து சோதனை மேற்கொண்டர். அப்போது அப்பெண் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வித்யா (27) என்பது அவரது கணவர் ஜெய்செந்தில் என்பதும் தெரியவந்தது.