தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேடியோவில் பாட்டுச்சத்தம் அதிகமாக கேட்டதால் ஆத்திரம் - வீட்டை எரித்த இருவர் கைது - வீட்டை எரித்த நபர்கள்

நத்தம் அருகே ரேடியோவில் பாட்டுச்சத்தம் அதிகமாக கேட்டதால் சண்டையிட்டு வீட்டை எரித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரேடியோவில் பாட்டுச்சத்தம் அதிகமாக கேட்டதால் வீட்டை எரித்த நபர்கள் கைது
ரேடியோவில் பாட்டுச்சத்தம் அதிகமாக கேட்டதால் வீட்டை எரித்த நபர்கள் கைது

By

Published : Jul 4, 2022, 7:12 PM IST

திண்டுக்கல்: நத்தம் சாணார்பட்டி கொசவபட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் பெனடிக் லூயிஸ் 60,. தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவிபாரதி 21, ஜோசப் ஆரோக்கியம் 22, இடையே ரேடியோவில் சத்தமாக பாட்டு வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று (ஜூலை 4) மீண்டும் மூவருக்கும் இடையே பிரச்சனை முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இந்த சண்டையில் கவிபாரதி மற்றும் ஜோசப் ஆகியோர் பெனடிக் லூயிஸ் மண்டையை உடைத்தனர். மேலும் ஆத்திரம் தீராதவர்கள் அவரது வீட்டிற்கு தீ வைத்தனர். இதில் அங்கு இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

சம்பவம் குறித்து விசாரித்த சாணார்பட்டி காவல்துறையினர், கவிபாரதி, ஜோசப் ஆரோக்கியம் இருவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க:சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு: கைதானவரிடம் மருத்துவக்குழு விசாரணை

ABOUT THE AUTHOR

...view details