திண்டுக்கல்: பழனியை அடுத்த பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (39). கடந்த 3ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து கீரனூர் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீஸார் விசாரணையில் மரணடமடைந்த சுரேஷ், பூலம்பட்டியை சார்ந்த கணவனை இழந்த உறவினர் பெண் மகேஸ்வரி (44) என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து சுரேஷ் உடனான தொடர்பைத் துண்டிக்குமாறு மகேஸ்வரியின் தம்பியான கருப்புசாமி (36) என்பவர் கண்டித்து வந்துள்ளார். இதனை சுரேஷும், மகேஸ்வரியும் கேட்காமல் தொடர்பு வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி சுரேஷ் தனது நண்பர் பூலாம்பட்டியைச் சேர்ந்த மணிமாறன்(25) என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார். மது அருந்திய பின் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் சுரேஷை, பழனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.