திண்டுக்கல்:பழனி அருகேயுள்ள விருப்பாச்சி பகுதி வழியாக ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, டிஎஸ்பி உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் துறை மற்றும் சத்திரப்பட்டி காவல் துறையினர் இணைந்து, விருப்பாட்சி மேட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பழனி அருகே கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது
திண்டுக்கல்: 70 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற ஐந்து பேர் கொண்ட கும்பலில், இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.`
அப்போது, சந்தேகிக்கும்படியாக ஒரு காரும் மூன்று இருசக்கர வாகனங்களும் வந்தன. தொடர்ந்து, காவல் துறையினரைக் கண்டதும் இருசக்கர வாகனங்களில் வந்த ஜேசுதாஸ், ராமசாமி, சசிகுமார் ஆகிய மூவரும் தப்பியோடினர். தொடர்ந்து காரில் வந்த கார்த்தி, சரவணக்குமார் ஆகிய இருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் முன்னுக்கு பின் முரணான அவர்கள் பதிலளித்ததில் சந்தேகமடைந்த காவல் துறையினர், காரை சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் 70 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடிய மூன்று பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்தக் கைது நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்கு டி.எஸ்.பி. சிவா சன்மானம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.