திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் சுப்பையா. அவரது மனைவி பாலுத்தாய். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பல ஏழைக் குடும்பங்களிடம் பணம் கொடுத்து அடமானமாக ரேஷன் அட்டைகளைைப் பெற்றுள்ளனர்.
அந்த அட்டைகளின் மூலம், ரேஷன் கடையில் அரிசி வாங்கி, அதனை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துவந்துள்ளனர்.