கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையானது ஏப்ரல் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வான புனித வெள்ளி நேற்று (ஏப்ரல் 02) அனுசரிக்கப்பட்டது. இந்த புனித வெள்ளியானது, இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நிகழ்வாக கருதப்படுகிறது.
அவர் இறந்தபின் அவரின் உடலானது கல்லறையில் அடக்கம் செய்யப்படும். இந்த நிகழ்வானது பெரிய பேராலயங்களில் மட்டுமே நடைபெறும். முதல் முறையாக திண்டுக்கல் தூய வளனார் பேராலயம் பங்கு சார்பாக ஏசுநாதர் உடல் தாங்கிய தூம்பா ஊர்வலம் அந்த பங்கில் உள்ள லயன் தெரு, தெய்வசிகாமணிபரம், சேவியர் தெரு, ஆரோக்கிய மாதா தெரு, உள்பட்ட பல பகுதி ஆலயங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.