தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேடசந்தூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து; சிசிடிவி வைரல்! - வேடசந்தூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்து சிசிடிவி வைரல்

வேடசந்தூர் அருகே சாலையின் நடுவே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நூல் பண்டல்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தன. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

லாரி விபத்து தொடர்பான சிசிடிவி காணொலி
லாரி விபத்து தொடர்பான சிசிடிவி காணொலி

By

Published : Dec 15, 2021, 6:43 AM IST

திண்டுக்கல்: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சிவா. அவரது உதவியாளர் சிவா. இவர்கள் இருவரும் மானா.மூனா.கோவிலூரில் இருந்து ஈரோட்டுக்கு நூல் பண்டல்களை ஏற்றிக் கொண்டு சென்றனர்.

வேடசந்தூர் அருகேகாக்காதோப்பு பிரிவு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் ஐந்து லட்சம் மதிப்புள்ள நூல் பண்டல்கள் சாலையில் சிதறின. சாலையின் நடுவே லாரி கவிழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

லாரி விபத்து தொடர்பான சிசிடிவி காணொலி

இந்த விபத்தில் ஓட்டுநர், உதவியாளர் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க:வாகனத்திற்கு வழி விடாத அரசுப் பேருந்து - ஓட்டுநரை தாக்கிய இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details