தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா ! - திண்டுக்கல்

திண்டுக்கல் :  நத்தம் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் மியாவாக்கி எனும் (அடர்ந்த காடுகள்) உருவாக்கும் முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

treeplantation-natham

By

Published : Oct 2, 2019, 11:10 PM IST

நத்தம் பேரூராட்சி மற்றும் பசுமை நத்தம் இளைஞர்கள் குழுவும் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். இதை மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) மதுபாலன், வாட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்

இதில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி (அடர்ந்த காடுகள்) உருவாக்கும் முறையில் ஒரே இடத்தில் இரண்டு ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு பந்தல் அமைத்து ஆர்வத்துடன் இளைஞர்கள், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய்துறை,பேரூராட்சி அதிகாரிகள், பசுமை நத்தம் தன்னார்வ இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details