தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து சங்கத்தினர் வேலை நிறுத்தம்...  பயணிகள் அவதி...

பழனியில் அரசு பேருந்துகள் இயங்காததால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.

strike to condemn federal government  Transport unions strike  Transport unions strike to condemn federal government  போக்குவரத்து சங்கத்தினர் வேலை நிறுத்தம்  வேலை நிறுத்த போராட்டம்  மத்திய அரசைக் கண்டித்து போக்குவரத்து சங்கத்தினர் வேலை நிறுத்தம்
போக்குவரத்து சங்கத்தினர் வேலை நிறுத்தம்

By

Published : Mar 28, 2022, 9:13 AM IST

திண்டுக்கல்:மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில், மார்ச் 23, 29 ஆகிய இரண்டு நாள்களும் நாடு முழுவதும் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், பழனியில் இன்று (மார் 28) அதிகாலை முதல் அரசு பேருந்துகள் எதுவும்‌ இயங்கவில்லை. இதன்காரணமாக பழனிக்கு சாமி தரிசனம் செய்யவந்த உள்ளூர், வெளியூர் பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பமுடியாமல் தவித்துவருகின்றனர்.

தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நாளையும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல மிகுந்த காலதாமதமாகலாம்.

இதையும் படிங்க: 'ஒரு பிடி மண்ணைக்கூட என்எல்சி நிறுவனத்திற்கு தர மாட்டோம்'- அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details