எதிர்வரும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அந்தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை, தேர்தல் அலுவலர்களாக அரசு பயன்படுத்துகிறது.
இந்த அலுவலர்களுக்கான இறுதி கட்டப் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு முழுவதும் இன்று(ஏப்ரல் 03) நடைபெற்றது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்ட பழனியில் 1500-க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காலை 10 மணிக்கு தொடங்கிய பயிற்சிக்கு சில ஆசிரியர்கள் 12 மணிக்கு மேல் வந்துள்ளனர். இதனைக் கவனித்த ஆட்சியர் விஜயலட்சுமி, தாமதமாக வந்த ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பி கண்டித்துள்ளார். இந்தப் பயிற்சிக்கு பின்னர் அனைவரும் தபால் ஓட்டுப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க:'நீ ஜெய்ச்சுருவ'- திமுக வேட்பாளரின் தலையில் திருநீறு அடித்த பூசாரி