தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ரவிமனோகரன், திமுக சார்பில் செந்தில்குமார், அமமுக சார்பில் வீரக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் அமமுக வேட்பாளர் வீரக்குமார் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிக்க வருகை தந்தார்.