திண்டுக்கல்: தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குவது கொடைக்கானல். இந்த ஊரின் மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை உள்ளிட்ட அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தப் பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகளில் முன்னதாக அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத் துறை மூலம் ஆங்காங்கே பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கனரக இயந்திரங்களை வைத்து சாலைகளைத் தோண்டி வேலைபார்த்து வருகின்றனர்.
இன்று (ஏப்.15) கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், பைன் மரக்காடுகள் பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறும் வழியே வந்த சுற்றுலா வாகனம் ஒன்று முன்னதாக சிக்கியது. இதனை அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட முடியாமல் வாகனங்கள் சிக்கியதில், நீண்ட தூரம் வானங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், ஊர் மக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தூய்மை இந்தியாவின் முன்மாதிரி கிராமம்!