திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் கோபிநாத். இவர் கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்தபோது, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பிறந்தநாளுக்காக அவருக்கு இனிப்பு வழங்கியுள்ளார். இனிப்பைப் பெற்றுக் கொண்ட கோபிநாத், பதிலுக்கு முத்தத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
பிறந்தநாள் பரிசாக முத்தம் கொடுத்த செயல் அலுவலர் - பணியிடை நீக்கம்! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்: வேடசந்தூரில் பெண் ஊழியர் ஒருவருக்கு பிறந்தநாள் பரிசாக முத்தம் கொடுத்த பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பிறந்தநாள் பரிசாக முத்தம் கொடுத்த செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இது கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் பரவி வந்தது. இதையடுத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருநாத், இதுபற்றி நேரடி விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்த நிலையில், கோபிநாத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!