திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக இருந்துவருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் மலை சாலையில் சுமார் 30 கிமீ தொலைவில் மயிலாடும்பாறை சுற்றுலா பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த இடம் வனத்துறையின் மூலம் மூடப்பட்டது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக சுவர்களில் பல்வேறு வண்ணங்களில் வனவிலங்குகளின் படங்கள் பார்த்து ரசித்தும் செல்வர். அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் கண்ணை வியக்கும் அளவில் அமைந்துள்ள மரங்களுடன் புகைப்படங்கள் எடுத்தும் இயற்கை அழகை ரசித்தும் செல்வர். ஆனால் இங்கு அமைந்துள்ள கண்காணிப்பு கோபுரம் சேதமடைந்தும், மேலே சென்று பார்க்க முடியாத நிலையும் உள்ளது.