திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாகவே மழை அதிகளவில் பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, நீர்வீழ்ச்சிகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் அருவிகளாக இருக்கக்கூடிய வட்டக்கானல் அருவி, பாம்பார்புரம் அருவி, பேரி பால்ஸ் உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று வருகிறது.
பசுமை நிறைந்த காடுகளுக்கு நடுவேவுள்ள இந்த அருவிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்து வருகிறது. இதன் காரணமாக, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தும் வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் தடுப்பு கம்பிகள் அமைக்க கோரிக்கை மேலும், சில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் அருவிகளில் சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். எனவே, அருவிகளில் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:திருட்டு வழக்கில் கைதான பழங்குடியின இளைஞர் உயிரிழப்பு... 5 போலீசார் பணி இடைநீக்கம்...