திண்டுக்கல்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.