திண்டுக்கல்:மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவு நேரங்களில் கடுமையான குளிரும் நிலை வருகிறது. பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.
குறிப்பாக, முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்ட பகுதிகளிலும் மன்னவனூர் ஏரி, பூம்பாறை உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்படுகின்றனர். இதனால் சுற்றுலா தளங்களுக்கு செல்லக்கூடிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.