திண்டுக்கல்:கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வார விடுமுறையில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துவகின்றனர். அந்த வகையில் நேற்று (மார்ச் 27) சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. இதனைமுன்னிட்டு தமிழ்நாடு படகு குழாம் சார்பாக நட்சத்திர ஏரியில் சைக்கிள் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் படகு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு சைக்கிள் படகு அறிமுகம் - cycle boat
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சைக்கிள் படகு அறிமுகம்
சைக்கிள் படகு அறிமுகம்
அதன்படி நேற்று நட்சத்திர ஏரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் கோடை வெயில் தொடங்கிய நிலையிலும் சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தனர்.
இதையும் படிங்க:Watch: அலைகளோடு நடக்கலாமா? கேரள கடற்கரையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!