திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக புதிதாக திறக்கப்பட்ட ரோஜா பூங்கா உள்ளது. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோஜா பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன. தற்போது பனி தாக்கத்தாலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் ரோஜா பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது.
சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் மலர்கள் இன்றி காய்ந்த செடிகளை கண்டு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், முறையான பராமரிப்பு இன்றி இருப்பதால் பனியின் தாக்கத்தின் காரணமாக ரோஜா செடிகள் அனைத்தும் கருகி இருக்கிறது என நுழைவுவாயிலில் தெரிவித்திருந்தால் தங்களது நேரம், ஆற்றும் பணம் விரயம் ஆகாமல் மற்ற இடங்களுக்கு சென்றிருப்போம் என சுற்றுலாப் பயணிகள் தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.