திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பருவ நிலைக்கு ஏற்ப பல்வேறு மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இவ்வாறாக பூத்துக் குலுங்கும் மலர்களை வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாள்களை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்வர்.
தற்போது மார்ச் ஏப்ரல் மாத சீசன் நேரங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் வேளையில் செடிகள் மரங்கள் காய்ந்து காணப்படும். ஆனால், ஸ்நோ ரோஸ் எனப்படும் இந்த வகை மலர்கள் தற்போது கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் பூத்துக் குலுங்குகிறது.