தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பாஸ் இல்லாத சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் கொடைக்கானல் வரத் தடை! - Kodaikkanal silver falls

வெளிமாநில‌ங்க‌ளில் கரோனா தொற்று அதிக‌ரித்துவ‌ரும் நிலையில், கொடைக்கானலுக்கு வ‌ரும் வெளி மாநில சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளுக்கு க‌டும் க‌ட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் இல்லாதவருக்கு தடை விதிக்கும் கொடைக்கானல்
இ-பாஸ் இல்லாதவருக்கு தடை விதிக்கும் கொடைக்கானல்

By

Published : Mar 10, 2021, 3:33 PM IST

திண்டுக்கல்:வெளி மாநில‌ங்க‌ளில் கரோனா தொற்று த‌ற்போது அதிக‌ரித்துவருகிற‌து. இந்நிலையில், கேரளா, ம‌க‌ராஷ்டிரா போன்ற‌ மாநில‌ங்க‌ளிலிருந்து கொடைக்கானல் வ‌ரும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளுக்குக் க‌டும் க‌ட்டுப்பாடு விதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி சோத‌னைச் சாவ‌டியில், மீண்டும் ம‌ருத்துவ‌ குழுவின‌ர், காவ‌ல் துறையின‌ர், சோத‌னையில் ஈடுப‌ட்டுள்ள‌ன‌ர். வெளி மாநில‌ ப‌ய‌ணிக‌ளுக்கு இ-பாஸ் க‌ட்டாயப்‌ப‌டுத்த‌ப்ப‌டுள்ள‌து. மேலும், இ-பாஸ் இல்லாத‌ ப‌ய‌ணிக‌ள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

கரோனா ப‌ரிசோத‌னை

முகக்‌க‌வ‌ச‌ம், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாம‌ல் இருப்பவர்களுக்கு அப‌ராத‌மும் விதிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. வெளி மாநில‌ங்க‌ளில் இருந்து த‌மிழ‌்நாட்டிற்கு வருபவர்கள் கரோனா ப‌ரிசோத‌னைசெய்து ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இ-பாஸ் இல்லாதவருக்கு தடை விதிக்கும் கொடைக்கானல்

இதையும் படிங்க:சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியக்கும் காஷ்மீர் பனிப்பொழிவு!

ABOUT THE AUTHOR

...view details