தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழை.. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை! - montus puyal

கொடைக்கானலில் 'மாண்டஸ் புயல்' எதிரொலியாக, சுற்றுலா இடங்களுக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 9, 2022, 12:15 PM IST

திண்டுக்கல்:கொடைக்கானலில் 'மாண்டஸ் புயல்' (Mandous Cyclone) எதிரொலியாக, சூறைக்காற்றுடன் தொடர்மழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக மக்கள் குடியிருப்புப் பகுதி, நெடுஞ்சாலைத்துறை, வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது ராட்சத மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்மழை காரணமாக இன்று (டிச.9) இந்த சுற்றுலா இடங்களுக்கு, சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழை.. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும், புயல் மழை குறைந்த உடன் இந்த சுற்றுலா இடங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நகர்ப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: 15 அடி உயர ராட்சத அலையால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி

ABOUT THE AUTHOR

...view details