தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரைய‌ண்ட் பூங்காவில் ம‌ல‌ர் நாற்றுக‌ள் வாங்க சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் ஆர்வம்! - பிரைய‌ண்ட் பூங்காவில் ம‌ல‌ர் நாற்றுக‌ள் வாங்க சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் ஆர்வம்

திண்டுக்கல்: கோடைகாலம் தொடங்கியதை அடுத்து பிரைய‌ண்ட் பூங்காவில் ம‌ல‌ர் நாற்றுக‌ள் குறைந்த‌ விலையில் விற்ப‌தால், சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Bryant Park
Bryant Park

By

Published : Feb 28, 2020, 6:24 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானலில் உள்ள முக்கிய‌ச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக பிரைய‌ண்ட் பூங்கா அமைந்துள்ள‌து. கொடைக்கானல் வரும் பயணிகள் ப‌ல்வேறு சுற்றுலாத் த‌ல‌ங்க‌ளைக் க‌ண்டு ர‌சித்தாலும் பிரையண்ட் பூங்கா முக்கிய‌மாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், வார விடுமுறையையொட்டி ஏராள‌மான‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் கொடைக்கான‌லுக்கு வ‌ருகைத‌ருகின்ற‌ன‌ர். இந்நிலையில், பிரையண்ட் பூங்காவில் வ‌ரும் சீசனுக்காக‌ப் ப‌ல்வேறு சிற‌ப்பு ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌ட்டுவ‌ருகின்றன.

Bryant Park

அந்த வகையில், சுற்றுலாப் ப‌ய‌ணிகளுக்கு ப‌ல்வேறு வ‌கையான ம‌ல‌ர் நாற்றுக‌ள் விற்ப‌னை செய்ய‌ப்ப‌ட்டுவ‌ருகின்றன. இதில் ரோஜா, டேலியா, சால்வியா, பிங்க் ஆஸ்ட‌ர் உள்ளிட்ட‌ ம‌ல‌ர் நாற்றுக‌ள் 10 ரூபாய் முத‌ல் விற்பனை செய்ய‌ப்ப‌ட்டுவ‌ருகின்றன. இத‌னால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலவகை மலர் நாற்றுகளைத் தங்கள் இல்லங்களுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: பெரியகுளத்தில் இருவருக்கு டெங்குப் பாதிப்பு: பொதுமக்கள் பீதி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details