மதுரை தத்தநேரியைச் சேர்ந்த கூட்டுறவு நாணய கடன் சங்க அலுவலக உதவியாளர் பணக்கொடி (42). இவர் நேற்று முன்தினம் (நவ. 19) மனைவி பிரியா, மகள்கள் கோபிகா, சோனா, மகன் அருண் பாண்டி ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கொடைக்கானலுக்குவந்த இவர்கள் அப்சர்வேட்டரி பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று (நவ. 20) அதிகாலை கொடைக்கானலில் நிலவிய கடும் குளிர் காரணமாக பணக்கொடிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து பணக்கொடியின் மனைவி பிரியா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவுசெய்த கொடைக்கானல் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குளிர் காரணமாக சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பிற சுற்றுலா வாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பாஜக மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்!