உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸினால் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக தற்போது நாடு முழுவதும் பெரும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமான வெள்ளி அருவி, ஏரிசாலை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்கள் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.