திண்டுக்கல்:தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்றும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.
மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்துகின்றனர். புதிய சாதனையாக தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தடுப்பூசி போடாதவர்களுக்கு கொடைக்கானலுக்குள் அனுமதியில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.