டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நாளை (ஜூன் 19) தொடங்குகிறது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய 'திண்டுக்கல் ட்ராகன்ஸ்' (dindigul dragons) அணியின் பயிற்சியாளர், "இந்தாண்டு நடக்கும் தொடரின் நிறைய புது முகங்கள் களமிறங்க இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் இளம் வீரர்கள். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
டிஎன்பிஎல் டூ பிசிசிஐ - 'திண்டுக்கல் ட்ராகன்ஸ்' பயிற்சியாளர் கருத்து - பிசிசிஐ
திண்டுக்கல்: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் திறமையான வீரர்களை கண்டறிந்து, அவர்களை இந்திய அணிக்கு அனுப்புவதே நோக்கமென 'திண்டுக்கல் ட்ராகன்ஸ்' அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
tnpl
உண்மையில், டிஎன்பிஎல் போட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சென்றடைந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டு அணிக்கு மட்டுமல்லாது இந்திய அணிக்கு நம்மால் திறமையான வீரர்களை அளிக்க முடிகிறது. ஐபிஎல் தொடருக்கு அடுத்து இந்தியா முழுவதும் பிரபலமான கிரிக்கெட் தொடர் டிஎன்பிஎல்.
இந்தத் தொடரில் விளையாடும் இளம் வீரர்கள் மூத்த வீரர்களுடன் விளையாடுகின்றனர். இது இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்" என்று அவர் கூறினார்.
Last Updated : Jul 18, 2019, 5:43 PM IST